(பாரிஸ் மான்கோ-வைப் பற்றி தமிழில் வெளிவரும் முதல் படைப்பு இது என்பதனை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்).யார் இந்த பாரிஸ் மான்கோ?துருக்கி மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த இசைமேதை.Rock and Roll எனும் இசைவடிவத்தின் பிரம்மகர்த்தா. இளசுகளின் நாடி நரம்புகளை சூடேற்றும் இன்றைய 'மைக்கேல் ஜாக்சன்'களின் முன்னோடி.
துருக்கியைச் சேர்ந்த ராக், பாப் இசைப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர்.
துருக்கியின் எக்காலத்திலும் சிறந்த
இசை வல்லுனர்களில் ஒருவர். துருக்கிய இசை வரலாற்றில் புதிய போக்கை உருவாக்கியவர். இன்றும் துருக்கிய இசை வடிவங்களில் இவரது பாதிப்பு மிக அதிகம்.
1980களில் எலக்ட்ரானிக் இசைக் கருவிகளை துருக்கிய இசையோடு கலந்தவர்.சுமார் 200 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரது பல பாடல்கள் ஆங்கிலம், ஜப்பானியம், கிரேக்கம், பல்கேரிய, ரொமானிய, பெர்சிய, அரபி என உலகின் பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. துருக்கியின் மிகப் பிரபலமானவர்களில் ஒருவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.
மான்கோ துருக்கியில் உள்ள மோடா, இசுதான்புல்லில் 1943 ஜனவரி 2 -ம் தேதி பிறந்தார். இவரது தாயார் ரிக்கத் உயானிக் (Rikkat Uyanık) 1940களில் புகழ்பெற்ற பாடகியாக விளங்கியவர். இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் பிறந்த இவருக்கு இவரது பெற்றோர் பாரிஸ் ’Baris’ என்று பெயர் சூட்டினர். ’Baris’ என்றால் அமைதி என்று பொருள். அந்த வகையில் இப்பெயர் கொண்ட முதல் நபர் இவர்தான்.
தம் உயர்க்கல்வி நாட்களில் தனது முதல் இசைக்குழுவான Kafadarlar ("The Buddies") எனும் குழுவை உருவாக்கினார். 1962-63களில் இவரது அடுத்தக் குழு Harmoniler ("The Harmonies")வின் மூலம் அமெரிக்க ராக் இசையையும் துருக்கியின் பாரம்பரிய இசையையும் கலந்து புதியதோர் இசை வடிவத்தை (rock and roll) வழங்கி புகழ் பெற்றது.
1963 இல் ஐரோப்பா பயணமானார். பாரிஸ் நகரத்தை ஒட்டிய உள்ளுர் இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து புதியதோர் குழுவை அமைத்து பாடல்கள் சிலவற்றை ஆங்கிலம், பிரெஞ்சு, துருக்கி மொழிகளில் பதிவு செய்தார். 1967 வரை ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்சு, துருக்கி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1967 ல் ”மரியா க்ளாட்” எனும் மாடல் அழகியை திருமணம் செய்துக்கொண்டார்.3 மாதங்களிலேயே இவர்களுடைய திருமண உறவு முறிந்தது.

1967 ல் ”மரியா க்ளாட்” எனும் மாடல் அழகியை திருமணம் செய்துக்கொண்டார்.3 மாதங்களிலேயே இவர்களுடைய திருமண உறவு முறிந்தது.
பின்னர் 1978 ல் லேல் (துலிப்) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ’டாக்குகன்’, ’பாட்டிகன்’ என இரண்டு மகன்கள் உண்டு.
1970 ல் துருக்கி,
இதன் வெற்றிக்கு பிறகு இவர் தொட்டதெல்லாம் துலங்கியது எனலாம். 1972ல் இவர் அமைத்த Kurtalan Ekspres எனும் குழு இறுதிவரை இவருடனே இருந்து படைத்த படைப்புகள் காலத்தை வென்று நிற்பவை. 1981 ல் வெளிவந்த Sözüm Meclisten Dışarı மகத்தான வெற்றியைப் பெற்றது.
இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற "Gülpembe" எனும் பாடல் உலகின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இவரது பாடல்களில் இருந்த இசை நேர்த்தியும்,நெஞ்சை துளைக்கிற இவரது குரலும் ரசிகர்களை இவர்மேல் பைத்தியமாக அலையவைத்தது.
1988 ல் மான்கோ, 7 முதல் 77 வரை எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கியதுடன் தாமே தொகுத்தும் வழங்கினார். துருக்கியின் தேசிய தொலைக்காட்சி சேனலான TRT 1 ல் ஒலிபரப்பான இசை, விவாதம், ஆவணங்களை உள்ளடைக்கிய இந்த நிகழ்ச்சி சிறுவர் முதல் பெரியவர் வரையிலான அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவெற்பை பெற்றது.
8 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 150 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார் மான்கோ.

பிற்காலங்களில் வெளியான சில இசைப்படைப்புகள் பெருமளவு வெற்றியை குவிக்காத போதிலும் எல்லாவற்றிற்கும் சேர்த்து இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியே பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.

பிற்காலங்களில் வெளியான சில இசைப்படைப்புகள் பெருமளவு வெற்றியை குவிக்காத போதிலும் எல்லாவற்றிற்கும் சேர்த்து இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியே பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.
1999 ம் ஆண்டு Mançoloji (Mançology or Manchology) எனும் இரட்டை இசைப்படைப்பின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. அதில் பாரிஸ் மான்கோ-வின் இசை வாழ்க்கையின் 40வது ஆண்டுவிழாவை கொண்டாடும் இசைப் பாடலும் ஒன்று. பரபரப்பாக வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, ஜனவரி 31 ம் நாள் மான்கோ திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். துருக்கி முழுவதையும் சோகம் ஆட்கொண்டது.
சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அழுகையும்,கண்ணீருமாக கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி மகத்தான அந்த இசைக் கலைஞனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

நீண்ட தலைமுடியும்,மீசையும்,கையில் அணிந்திருந்த பெரிய மோதிரமும் பாரிஸ் மான்கோவின் தனித்த அடையாளம். இது இவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவருக்குப் பிறகுதான் பெரும்பாலான கலைஞர்கள் தங்களுக்கென்று தனித்தவொரு அடையாள தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள துவங்கினர் எனலாம்.
தற்காலத்தில் ’மைக்கேல் ஜாக்சன்’ தலைமுறையினரின் நிகழ்ச்சியின் போது நிலவுகிற நிசப்தமும்,ஆர்ப்பரிப்பும்,
அழுகையையும்,பரவச நிலையையும் காணும்போது இதுபோன்ற ஒரு ’மேஜிக்’கை அன்றே நிகழ்த்திக் காட்டிய பாரிஸ் மான்கோவின் ஆளுமையை புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழில் ’யாருக்கும் தெரியாத’ அல்லது ’அதிகம் தெரியாத’ பாரிஸ் மான்கோவை இங்கு நினைவு கூர்ந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
(மான்கோவின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘Gulpembe’ பாடலைக் காண கீழ்வரும் லின்க் -ஐ சுட்டவும்)
http://www.youtube.com/watch?v=w7OmCk8sZ8s
(உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யவும்)
1 comment:
thanks
Post a Comment