- தமிழ்.சந்திரமோகன்
ராஜா ரவி வர்மா(1848 -1906)
உலகப்புகழ் பெற்ற ஓவியர்.மேலைநாட்டு ஓவியக் கலையினை இந்திய ஓவியக் கலையினுள் கலந்தவர்.புராண,இதிகாச பெண் கதாபாத்திரங்களை தென்னிந்திய பெண்கள் வடிவத்தில் வரைந்து அதனை
சர்வதேச கண்காட்சிகள் பலவற்றில் காட்சிகளாக்கி பல்வேறு விருதுகளையும்,பட்டங்களையும் வென்றார்.
அதே சமயத்தில் கற்பனை வளமில்லாத,மேலைநாட்டு ஓவியங்களை காப்பியடிக்கிற,இந்திய ஓவியக் கலையினை சீரழிக்கிற ஓவியர் என விமர்சிக்கப் பட்டார்.குறிப்பாக வட இந்திய ஓவியர்களும்,ஆன்மீக தலைவர்களும் இவரை கடுமையாக விமர்சித்தனர்.
தான் சொந்தமாக தொடங்கிய அச்சகத்தில் தனது ஓவியங்களை அச்சில் வெளியிட்டபோது ’காலண்டர் ஓவியர்’ என கொச்சைபடுத்தப் பட்டார்.
அவர் மறைந்து சுமார் நூறாண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் சமீபத்தில் 2002 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற ஓவிய ஏலத்தில் இவரது ‘யசோதையும் கிருஷ்ணனும்’என்ற ஓவியம் 56 லட்சத்திற்கு ஏலம் போனது.
இப்போதும் அவரை புகழவும்,இகழவும் கூட்டம் உண்டு இங்கே.
என்னது?
’போதும் நிறுத்து!.முதலில் அவரது படைப்புகளை காட்டு’ என்கிறீர்களா ?
அது சரி.
படைப்புகளைப் பார்க்க கீழே சுட்டுங்கள்.
வார்த்தைகளில் அடங்காத அற்புதம் 1
வார்த்தைகளில் அடங்காத அற்புதம் 2
வார்த்தைகளில் அடங்காத அற்புதம் 3
வார்த்தைகளில் அடங்காத அற்புதம் 4
ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் என்னுள் ஏகப்பட்ட இரசாயண மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர்ந்தேதான் கட்டுரைக்கு வைத்தேன் இந்த தலைப்பு ‘வார்த்தைகளில் அடங்காத அற்புதம்’ என்று.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்.
1 comment:
hi hi nan than da sollatha varthaiyel irukkum kanaththai unarnthen un vasalvariyel
Post a Comment