-தமிழ்.சந்திரமோகன்
நட்பு
காற்றாய் இருக்கும்
கடல்போல் இருக்கும்
கனவும் கூட காத்து நிற்கும்...!
நினைவிருக்கும்
சுகமிருக்கும்
நினைப்பதிலும் சுகமிருக்கும்...!
மனமேகம் கருக்கும்
இடி மின்னலடிக்கும்
நினைவுகளே மழையாய் இருக்கும்...!
பசி இருக்கும்
தாகம் இருக்கும்
இவற்றைக் கடந்துஓர் தேவை இருக்கும்...!
‘நட்பு’ என்ற பெயர்தான் அதற்கும்
இறுதிவரை துணையிருக்கும்
அவ்வப்போது நினைவிருக்கும்
இன்றிலிருந்து இறுதிவரை
இந்நட்பினது நினைவிருக்கும்...!
-வாசல்வரை(2000-ம் ஆண்டு)
உயரே பறந்தாலும் சரி,பாதாளத்தில் வீழ்ந்தாலும் சரி உங்களுடன் துணையாக வர நண்பன் ஒருவன் உங்களுக்கு இருந்தால்,அது உங்கள் பிறவிப்பயனே.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள தின வாழ்த்துக்கள்.
பிரிவின் சுமை
பிரிவுகள் மட்டும் இல்லாதிருந்தால்
நினைவுகள் என்பது கொல்லாதிருக்கும்
உறவுகள் மட்டும் சொல்லாதிருந்தால்
உரிமைகள் என்பது இல்லாதிருக்கும்
கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால்
துயரம் என்பது நில்லாதிருக்கும்
உணர்வுகள் மட்டும் இல்லாதிருந்தால்
பிரிவுகள் என்பதே புரியாதிருக்கும்
பிரிவுகள் என்பது சுமையாகும் நேரத்தில்
நினைவுகள் என்பதே சுகமாயிருக்கும்
-வாசல்வரை(2000-ம் ஆண்டு)
உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.
2 comments:
awesome
awesome poems
Post a Comment